Posts

பண்பாட்டு மாற்றம்

பண்பாட்டு மாற்றம் குறிப்பிட்ட ஒரு மக்கட் குழுவினருக்கு உரிய பண்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதைப்  பண்பாட்டு மாற்றம்  எனலாம்.   பண்பாடு  என்பது இயக்கத் தன்மை கொண்டது இதில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன.  கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்பதால், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது இது குறித்த சில பண்பாடுகளுக்கு மட்டுமன்றி எல்லாப் பண்பாடுகளுக்குமே பொருந்தும் ஒரு விடயம் ஆகும். போக்குவரத்து வசதிகள், தொடர்பு வசதிகள் என்பன மிகவும் குறைவாக இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன  இன்றைய காலகட்டம் பல துறைகளிலும் வேகமான மாற்றங்களைக் காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியினால், போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதிகள் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன.  இதனால், பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள் அதிகரித்துள்ளன.  ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது. பண்பாடு என்பது வெறுமனே பல்வேறு நடவடிக...

இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல்

இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மிக விரைவான வளர்ச்சி கல்வித் துறையிலும் மிகப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தாத கல்வி நிறுவனங்களே இல்லை என்கின்ற அளவுக்குத் தொடக்கப் பள்ளி தொடங்கி உயர்க்கல்விக் கழகங்கள் வரையில் எல்லா இடங்களிலும் இதன் ஆதிக்கம் பெருகி வருகின்றது.  இத்தகையச் சூழலில், கற்றல் கற்பித்தலில் இணையமும், இணைய ஏந்துகளும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன எனலாம். கோலின்சு (1996) என்பார் கூற்றின்படி, 1996 / 1997ஆம் ஆண்டுகளிலேயே கற்றல் கற்பித்தலில் இணையம் ஊடுருவி வளர்ந்துவிட்டது என்கிறார். இதன் அடிப்படையில், இணையம் வழியான கற்றல் கற்பித்தல் முறைமை இன்று மிகவும் புகழ்பெற்றதாகவும் எல்லாராலும் விரும்பப்படுவதாகவும் இருக்கின்றது.  ஆகவேதான், இணையத்தைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை வழிநடத்துவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களும், தனியார், தன்னார்வ நிறுவனங்களும் முண்டியடித்துக்கொண்டு முயற்சிகளை முன்னெடுக்கின்றன.  இணையத்தின் வழியாக அல்லது செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்...

படைப்பாற்றல் கல்வி முறை

படைப்பாற்றல் கல்வி முறை படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology) அறிமுகம் : படைப்பாற்றல் கல்வி முறையானது தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தலுக்கான ஒரு முறையாகும். இது மாணவர்களின் படைப்பற்றல் திறனை வெளிக்கொணர்வதற்கு உதவும் முறையாகக் கருதப்படுகிறது தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 120 பள்ளிகளில் இப்புதிய கற்றல் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சூலை - 2007ல் நடைபெற்ற பட்டறை மூலம் ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் இணைந்து இப்புதிய கற்றல் முறைக்கு ஏதுவான கட்டகங்களையும் பாடத்திட்டங்களையும் கால அட்டவணைகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 2000-க்கு அதிகமான மனித நாள்கள் இப்பணிக்காக செலவிடப்பட்டு அக்டோபர் 2007-ல் தமிழக அரசு அரசாணை எண்: 260 நாள்: 12-10-2007 மூலம் படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. முதலில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நா...

மேலாண்மை செயல்பாடுகள்

மேலாண்மை செயல்பாடுகள் திட்டமிடுதல், நிறுவுதல், தலைமையேற்றல், கட்டுப்படுத்துதல் என்று மேலாண்மைச் செயல்பாடுகள் பட்டியலிடப்படுகின்றன. மேலாண்மை பற்றிய அடிப்படைப் புத்தகங்கள் எல்லாம் இவ்வாறே எழுதப்பட்டன. Henri Fayol என்ற பிரான்ஸ் நாட்டவர், ‘தொழிற்சாலையில் பொது நிர்வாகம்’ என்ற புத்தகத்தை 1916-ல் வெளியிட்டார்.  இது மேலாண்மை செயல்பாட்டைப் பற்றிய அடிப்படைப் புத்தகமாகக் கருதப்படுகிறது. இவர் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் மேலாண்மை இயக்குநராக இருந்த அனுபவத்தில் இப்புத்தகத்தை எழுதினார்.  திட்டமிடுதல் (planning), அமைத்தல் (organizing), ஆணையிடுதல் (commanding), ஒருங்கிணைத்தல் (co-ordinating) மற்றும் கட்டுப்படுத்துதல் (controlling) என்ற ஐந்து மேலாண்மைச் செயல்பாடுகளைப் பட்டியலிட்டார்.  மேலாண்மையாளர் எந்தத் துறையில் வேலைசெய்தாலும் இந்தச் செயல்பாடுகள் அவசியம். எதிர்காலத் தேவைகளைக் கருதி சில குறிக்கோள்களை நிர்ணயித்து அவற்றை அடைவதற்காக நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுதான் திட்டமிடல். தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சிகொடுத்து, வேலைக்கு அமர்த்துவது, உள்ளீட்டு பொருட்களை வாங்குவது, ...

வகுப்பறைக் கற்பித்தல் முறைகள்

வகுப்பறைக் கற்பித்தல் முறைகள் சாதாரணமாக வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடும் போது ஒரு பாட அலகை கற்பிப்பதற்கு மிகச் சிறந்த கற்பித்தல் முறை எதுவென யாரும் சிபார்சு செய்யமுடியாது.  ஆசிரியரே படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார்.  கற்பித்தல் ஓரு விஞ்ஞானம் போன்ற ஒரு கலையாகும். மிகச் சிறந்த கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளல் ஆசிரியரின் கடமையாகும். பாடத்தைக் கற்பித்தலின் நோக்கம், மாணவரின் இயல்பு, பாடஅலகின் தன்மை, பௌதிக சூழலின் தன்மை, பெற்றுக்கொள்ளக்கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், ஆசிரியரின் சுபாவம் அகிய அனைத்து சாதனங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.  அந்த வகையில் வகுப்பறைக் கற்பித்தலை திட்டமிடுவதில் பல கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன.  எனவே பொருத்தமான சூழலில் பொருத்தமான பாடஅலகிற்கு ஏற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்க்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும்.  அந்தவகையில் கற்பித்தல் முறைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும். 1.விரிவுரை முறை கற்பித்தல் 2.குழுமுறைக் கற்பித்தல் 3.வினாவிடை முறைக்கற்பித்தல் 4.கூட்டுமுறைக்கற்பித்தல் - பல்தர...

பாலினச் சமத்துவக் கல்வி: ஆண் - பெண்

பாலினச் சமத்துவக் கல்வி: ஆண் - பெண்  இருபாலர் கல்வித் திட்டத்தின் அடிப்படையே ஆணும் பெண்ணும் தோழமையோடு இணைந்து படித்து வளர வேண்டும் என்பதுதான்.  ஆணையும் பெண்ணையும் தனித் தீவுகளாகப் பிரித்துவைத்துச் சமத்துவத்தை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்? ஆனால் இன்று பெரும்பாலான இருபாலர் பள்ளிகள் மட்டுமல்லாமல் கல்லூரிகளும் இப்படித்தான் மாணவ - மாணவிகளை ‘நல்ல பிள்ளைகள்’ ஆக்கி வெளி உலகத்துக்கு அனுப்புகின்றன . கல்விக்கூடங்களே இப்படி இருக்கும்போது நம்முடைய வீடுகளைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. தாய்மை மிக உயர்ந்தது, தாயைத் தெய்வமாகப் போற்ற வேண்டும் எனச் சொல்லித்தரும் கலாசாரமும் அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழிமொழியும் நம்முடைய வீடுகளும் பெண்ணை சக மனுஷியாக மதிக்கச் சொல்லித்தரத் தவறிவிடுகின்றன. புரியாத புதிர்! கூடவே படிக்கும், அருகிலேயே வசிக்கும் பெண் பிள்ளைகளைப் பற்றி எந்தப் புரிதலும் கொடுக்கப்படாத ஆண் குழந்தைகள், இளைஞர்கள் ஆன பிறகு சமூகத்தில் பெண்களை நேருக்கு நேர் சந்திக்கவும் பழகவும் வேண்டிவருகிறது . அப்போது திகைப்பும், தடுமாற்றமும், ஈர்ப்பும் உண்டாகின்றன. ஈர்ப்பை எப்படிக்...

கற்பித்தல் மற்றும் கற்றல்

கற்பித்தல் மற்றும் கற்றல் வழிமுறைகள் 6இ+எஸ் மாடல் இந்த 6இ+எஸ் திட்டம் (ஈடுபாடு, ஆராய்ந்து அறிதல், விளக்கமளித்தல்,  விவரித்தல், மதிப்பிடல், விரிவாக்குதல் மற்றும் தரம்) அமைப்பு சார்ந்த கல்விமுறை அடிப்படையில் கல்வியியல் பேராசியர்களின் ஆலோசனைகளைப் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது.  அமைப்பு சார்ந்த முறையில்  கல்விக்கான பாடத்திட்டமும் செயல் முறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.  இதனால் தாம் ஏற்கனவே பெற்ற கல்வியுடன் மேலும் பல புதிய தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்கின்றனர். இந்த ஒவ்வொன்றும் கற்றலின் ஒவ்வொரு கட்டத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர் இருவரும் ஈடுபடும் பொதுவான செயலைக் குறிக்கிறது.  முன்பு பெற்ற அறிவை பயன்படுத்தவும், அதை மேம்படுத்தவும், புதியவற்றைக் கற்றுகொள்ளவும் அதனை தொடர்ந்து மதிப்பீட்டுக்கு உட்படுத்துதலும் இங்கு நிகழ்கிறது. ஈடுபடுதல் 'ஈடுபடும்' செயல் முன்பு கற்றவைக்கும் இன்று கற்கப்போவதற்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்; புதிய செயல்களை உருவாக்க வேண்டும்; மாணவர்களின் சிந்தனைகள் செயல்முடிவுகளை குறித்து இருக்குமாறு செய்ய வேண்டும்....