கற்பித்தல் மற்றும் கற்றல்

கற்பித்தல் மற்றும் கற்றல் வழிமுறைகள்

6இ+எஸ் மாடல்
இந்த 6இ+எஸ் திட்டம் (ஈடுபாடு, ஆராய்ந்து அறிதல், விளக்கமளித்தல்,  விவரித்தல், மதிப்பிடல், விரிவாக்குதல் மற்றும் தரம்) அமைப்பு சார்ந்த கல்விமுறை அடிப்படையில் கல்வியியல் பேராசியர்களின் ஆலோசனைகளைப் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. 
அமைப்பு சார்ந்த முறையில்  கல்விக்கான பாடத்திட்டமும் செயல் முறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
 இதனால் தாம் ஏற்கனவே பெற்ற கல்வியுடன் மேலும் பல புதிய தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்கின்றனர்.
இந்த ஒவ்வொன்றும் கற்றலின் ஒவ்வொரு கட்டத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர் இருவரும் ஈடுபடும் பொதுவான செயலைக் குறிக்கிறது.
 முன்பு பெற்ற அறிவை பயன்படுத்தவும், அதை மேம்படுத்தவும், புதியவற்றைக் கற்றுகொள்ளவும் அதனை தொடர்ந்து மதிப்பீட்டுக்கு உட்படுத்துதலும் இங்கு நிகழ்கிறது.
ஈடுபடுதல்
'ஈடுபடும்' செயல் முன்பு கற்றவைக்கும் இன்று கற்கப்போவதற்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்; புதிய செயல்களை உருவாக்க வேண்டும்; மாணவர்களின் சிந்தனைகள் செயல்முடிவுகளை குறித்து இருக்குமாறு செய்ய வேண்டும். 
மனதளவில் அவர்கள் பாடத்திலும், செயல்முறையிலும் அல்லது பயிற்றுவிக்கப்படும் திறனில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பர்
. ஒவ்வொரு பாடமும் சிந்தனையைத் தூண்டும் ஒரு முக்கியமான கேள்வியைக் கொண்டிருக்கும். ஆராய்ந்து அறிதல் பகுதியில் உள்ளவற்றை அறியும் வண்ணம் சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
ஆராய்ந்து அறிதல்
இந்த கட்டத்தில் மாணவர்கள் பாடத்தை ஆழமாகப் படிக்கின்றனர். இங்கு அதிக வழிகாட்டுதல்களின்றி பாட புத்தகங்களை அவர்களாகவே படித்தறியும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 மாணவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் தேவைப்படும். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டு அவர்களின் உரையாடல்களை கவனித்து அவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
விளக்கமளித்தல்
இக்கட்டத்தில் மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை விளக்கிக் கூற உதவுகிறது. தாம் புரிந்துகொண்டதை வார்த்தைகளில் விளக்கிக் கூறவோ அல்லது தங்களின் திறமைகளை வெளிக்காட்டவோ வாய்ப்பு அமைகிறது.
 இக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் புதிய கலைச்சொற்கள், வரையறைகளைக் குறிப்பிடவும் திறன்களையும் பண்புகளையும் விளக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.
விவரித்தல்
இங்குதான் மாணவர்கள் ஒரு பயிற்சியில் நேரடியாக ஈடுபடுகிறார்கள். தாம் புதிதாக கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்தவும் அதில் தான் பெற்ற அனுபவங்களையும் சோதனை முடிவுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது.
 மாணவர்கள் தங்களின் பரிசோதனை முடிவுகளை மதிப்பீட்டுக்கு வைக்கவும், முடிவுகளை சமர்ப்பிக்கவும் செய்கிறார்கள்.
மதிப்பிடுதல்
மாணவர்களுக்கு கல்வி சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் மதிப்பிடுகிறார். இக்கட்டத்தில் மாணவர்கள் சுய மதிப்பீடு, குழு மதிப்பீடு செய்யவும் மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகளையும் சாதனங்களையும் உருவாக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விரிவாக்குதல்
இப்பகுதியில் பாடதிட்டத்திற்கு வெளியே உள்ளவற்றை அறிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாம் கற்றுக்கொண்டவற்றை பல புதிய விசயங்களுக்கும் புதிய சூழலுக்கும் பயன்படுத்த உதவுகிறது.
 எனினும் இச்செயல் மாணவர்களின் உற்சாகத்தால் விளைவதாகும். இது முழுக்க முழுக்க மாணவர்கள் தாங்களாகவே செய்யும் செயல். எனினும் ஆசிரியர்கள் சில ஆலோசனைகள் வழங்கலாம்.
தரங்கள்
ஒவ்வொரு பாடத்திட்டம் வாரியாக தரம் நிர்ணயிக்கப்பட்டு வரப்படுகிறது. தரம் நிர்ணயம் தேசிய, மாநில அல்லது பகுதிவாரியான தரத்திற்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. 
இது பள்ளி அல்லது வட்டார அளவில் பாடத்திட்டதில் என்னென்ன பாடங்கள் சேர்க்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது மற்றும் ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான வழிமுறைகளை அளிக்கிறது.
மற்றவர்களைப்போல் உருவகப்படுத்தி நடித்தல்
கலந்துரையாடல் : கற்பித்தல் முறையின் ஒரு பகுதியான உருவகப்படுத்தி நடித்தல் மூலம் மாணவர்களுக்கு அதிக பலன் கிட்டும் (உதாரணமாக பகத்சிங் போல பாவனை செய்து கருத்துக்களை விளக்குதல்). இந்த முறையை சிறப்பாக செயல் படுத்த முழுமையான தயாரிப்பு திட்ட வரையறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் பயிற்சிக்குப் பின் விளக்கிக் கூற கால அவகாசம் ஆகிய அனைத்தும் மிக அவசியம்.
 இதன் மூலம் மாணவர்களின் சமயோஜித அறிவு மற்றும் குழு வழிகற்றல் ஊக்குவிக்கப்படுகிறது. இப்பயிற்சி மாணவர்கள் பலவித தகவல்களில் தெளிவு பெறவும் தான் படித்தவற்றிலிருந்து அன்றாட வாழ்வில் நடப்பவற்றை ஒப்பிட்டு பார்க்கவும் வழி செய்கிறது.

பல்வேறு வயது உடைய மாணவர்கள் கொண்ட வகுப்பில் கற்பித்தல்

பல வயது மாணவர்கள் கொண்ட வகுப்பில் கற்பித்தல் கற்போரின் பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கிறது. பாடங்கள் ஒவ்வொரு தலைப்பு வாரியாக பல்வேறு தரத்தில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு தரத்திற்கு தனித்தனி பயிற்சி வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
 மாணவர்கள் தங்களுக்குள் உதவி செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொருவரின் வயதிற்கேற்ப உள்ள திறன்களை அறிந்து கொள்ள முடிகிறது 
 இந்த கூட்டு முயற்சியில் மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு ரோல்-மாடல்களாகவும் (முன் மாதிரி) வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.
இவ்வகை வகுப்புகளில் பல்வகையான கற்பித்தல் முறைகளையும் மதிப்பீட்டு முறைகளையும் கையாளலாம். 
குழு அமைப்பதில் கடுமையான விதிமுறைகளில் தளர்வு, தனிப்பட்ட கற்றல் முறைகள், அனைவரின் பங்களிப்பு, பிறரை மதித்து நடத்தல் எனப் பல்வேறு வகையில் பயனுள்ளதாக உள்ளது.
குழுவழிக் கற்றல்
குழுவழிக் கற்றல் முறைதான் பிற முறைகளைக் காட்டிலும்  அதிக அளவில் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
 மாணவர்கள் குழுவாக செயல்படும் வாய்ப்பு, வேகமாகவும் செம்மையாகவும் கற்றுக்கொள்ளல், அதிகம் தக்கவைத்துக்கொள்ளும் திறன், கல்வி பயில்தல் பற்றி நேர்மறையான எண்ணம் கொண்டுள்ளார்கள் என முடிவுகள் தெரிவிக்கின்றன. 
 மாணவர்களை குழுக்களாக அமைத்து ஒரு செயலை முடிக்குமாறு பணித்தல் மட்டுமே இம்முறையில் நிகழ்வதில்லை. இம்முறையில் வெற்றி அடைய குறிப்பிட்ட வழிமுறைகள் பல உள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் அவற்றை அறிந்திருத்தல் அவசியம்
. சமீபத்தில் இம்முறை தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பல புகார்கள் வந்துள்ளன. மாணவர்கள் குழுவாக செயல்படும்போது ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட பிற வேலைகளில் ஈடுபடுதல் கூடாது.
 நன்கு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து குழுத்தலைவனாக நியமித்து அவற்றை கவனிக்க பணிக்கப்படுவதால் அவர்களுக்கு இத்திட்டம் ஏற்றதல்ல. இன்று பணியிடங்களில் அதிக எதிர்பார்க்கப்படும் பிறருடன் இணைந்து செயல்படுதல், கூட்டாக செயல்படுதல் முதலிய குணங்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது.
 ரிப்போர்ட்டர், பதிவுசெய்பவர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் முதலிய பல்வேறு பாத்திரங்களில் பணி செய்ய குழுவழிக் கற்றல் வாய்ப்பளிக்கிறது. குழுவில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்; 
அவர்களுக்குத் தனித்தனி பணிகள் உள்ளன. யாரும் இதில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது. ஒரு குழுவின் வெற்றி ஒவ்வொரு தனிநபரின் உழைப்பில்தான் உள்ளது
மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சிறுசிறு குழுக்களாக செயல்படுவது அவர்களுக்கும் தங்கள் குழு நண்பர்களுக்கும் உதவியாக இருக்கிறது. குழுவழிக் கற்றல் முறை கீழ்க்கண்ட ஐந்து பண்புகளைக் கொண்டுள்ளது.
  • குழுவாக செயல்படுவதன் மூலம் சிறப்பாக செய்யக்கூடிய செயல்களை மாணவர்கள் குழுக்களாக இணைந்து செய்து முடிக்கிறார்கள்.
  • இரண்டு முதல் ஐந்து நபர்கள் கொண்ட குழுவாக செயல்படுகிறார்கள்.
  • பொதுவான பணிகளை  செய்து முடிக்க தங்களின் கூட்டுறவு மற்றும் சமுதாய குணங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
  • ஒவ்வொருவரும் குழுவின் மற்ற உறுப்பினர்களை சார்ந்திருக்கின்றனர். செயல்திட்டம் அதற்கு ஏற்றது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
  • ஒவ்வொரு மாணவனுக்கும் தன் செயலில் முழு பொறுப்பு உண்டு.
கற்கும் முறைகள்
கற்கும் முறைகள் என்பது கல்வி கற்க பயன்படுத்தும் வெவ்வேறு வகையான உத்திகள் மற்றும் செயல்முறைகள் ஆகும்

கற்கும் முறைகள் என்ன?

காட்சி வழி கற்போர் : காட்சி வழி கற்றல்
இவ்வகை கற்போர் ஆசிரியரின் உடலசைவு மொழிகள் மற்றும் முகபாவனைகளைக் காணும்போதுதான் பாடத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். 
கவனிக்கும்போது எதுவும் கண்ணை மறைக்காமல் இருக்க இவர்கள் வகுப்பறையில் முன் வரிசையில் அமர விரும்புவர். இவ்வகை கற்போர்கள் காட்சி வழியாகவே சிந்திக்கிறார்கள். 
படங்கள், சார்ட்டுகள், படங்களுடன் கூடிய பாடப்புத்தகங்கள், வீடியோ மற்றும் கையடக்க குறிப்புகள் மூலம் நன்றாக புரிந்துகொள்வர். வகுப்பில் பாடம் நடத்தும்போதோ ஆசிரியர் கலந்துரையாடும்போதோ இவ்வகை கற்போர் முழுதும் குறிப்பு எடுக்க விரும்புவர்.
கேட்டல் வழி கற்போர் : செவி வழி கற்றல்
இவ்வகைக் கற்போர் லெக்ச்சர்கள், கலந்துரையாடல்கள், பாடத்தில் உள்ளவற்றைப் பற்றி பிறரிடம் விவாதித்தல் மற்றும் அவர்களின் கருத்துகளைக் கேட்டல் மூலம் சிறப்பாகப் பயில்வர்.
 சொற்களில் பொதிந்திருக்கும் பொருளை ஆசிரியர் குரலின் பேச்சு சுருதி, வேகம் முதலியவற்றைக் கொண்டு அறிய முற்படுவர். இவர்களைப் பொறுத்தவரையில் எழுத்து வடிவில் உள்ளதைக் காட்டிலும் பேச்சு வடிவில் உள்ளது அதிக பயன்தரும். பாடத்தை சத்தமாகப் படிப்பதும்  டேப் ரெக்கார்டர் மூலம் பாடத்தினை கேட்பதும் அதிக பயன்தரும்.
உடல் அசைவு / தொடுதல் வழி:  அசைவுகள், தொடுதல் வழி கற்றல்.
இவ்வகை கற்போர் சுற்றுப்புற உலகில் உள்ளதை தாங்கள் நேரில் அறிந்து, ஆராய்ந்து கற்க விரும்புவர். ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். ஆராய்ச்சி செய்யும் எண்ணம் அவர்களின் கவனத்தை அடிக்கடி சிதைக்கும்.

கற்பித்தலும் கற்றலும்

கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இக்காரணிகள் கற்பவர் தன் இலக்கு நோக்கி செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும், பழக்கவழக்கங்கள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது.
கடந்த நூற்றாண்டுகளில் கல்வி பற்றி பல்வேறு வித பார்வைகள் இருந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது (கற்றல் மூளையின் செயல்திறனால் நிகழ்கிறது) அல்லது கல்வி வளர்ச்சி சார்ந்தது (கற்கும் அனுபவத்தால் அறிவு ஏற்படுகிறது) என்ற இருவேறுவித பார்வைகள் இருந்தது.
 இவ்விரு கொள்கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து பார்த்தோமானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உணரலாம். இவற்றை ஒருங்கிணைக்கும் போது பல்வேறு பிற காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 அவற்றில் சில - அறிவுத்திறன், கற்கும் முறை, பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை உள்ளவர்கள் மற்றும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்களின் கல்வி கற்கும் முறை.

Comments

Popular posts from this blog

இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல்

படைப்பாற்றல் கல்வி முறை

பண்பாட்டு மாற்றம்