இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல்
இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல்
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மிக விரைவான வளர்ச்சி கல்வித் துறையிலும் மிகப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தாத கல்வி நிறுவனங்களே இல்லை என்கின்ற அளவுக்குத் தொடக்கப் பள்ளி தொடங்கி உயர்க்கல்விக் கழகங்கள் வரையில் எல்லா இடங்களிலும் இதன் ஆதிக்கம் பெருகி வருகின்றது.
இத்தகையச் சூழலில், கற்றல் கற்பித்தலில் இணையமும், இணைய ஏந்துகளும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன எனலாம். கோலின்சு (1996) என்பார் கூற்றின்படி, 1996 / 1997ஆம் ஆண்டுகளிலேயே கற்றல் கற்பித்தலில் இணையம் ஊடுருவி வளர்ந்துவிட்டது என்கிறார்.
இதன் அடிப்படையில், இணையம் வழியான கற்றல் கற்பித்தல் முறைமை இன்று மிகவும் புகழ்பெற்றதாகவும் எல்லாராலும் விரும்பப்படுவதாகவும் இருக்கின்றது.
ஆகவேதான், இணையத்தைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை வழிநடத்துவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களும், தனியார், தன்னார்வ நிறுவனங்களும் முண்டியடித்துக்கொண்டு முயற்சிகளை முன்னெடுக்கின்றன.
இணையத்தின் வழியாக அல்லது செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்கள், மின்னிதழ்கள், ஒலி ஒளி மின்னூடகங்கள், மடற்குழுக்கள், சமூக வலைத்தளங்கள் முதலான இணைய ஏந்துகள் வழியாகத் தமிழ்மொழியைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டிய தேவைகள் அதிகரித்து வருகின்றன.
ஆகவே, காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அணுகுமுறையில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய விரிவான வாய்ப்புகள் இன்று உருவாகி இருப்பதை ஊக்கத்துடன் வரவேற்று விரிவாகப் பயன்கொள்ள வேண்டும்.
இணையம் வழிக் கற்றல் (e-learning) இரண்டு வகையில் செயல்படுகின்றது. ஒன்று இணையம் வழி கற்பித்தல் (web based instruction, WBI). மற்றொன்று, கல்வி வலைத்தளங்கள் வழி கற்றல் (educational web sites, EWS). இவ்விரண்டும் ஆங்கிலத்தில் மட்டுமே செயற்பட முடியும் என்ற நிலைமை மாறி, இன்று தமிழிலும் மிக இலகுவாகச் செயல்படுத்த முடிகின்றது.
இணையம் வழிக் கற்றல் (e-learning) இரண்டு வகையில் செயல்படுகின்றது.
ஒன்று இணையம் வழி கற்பித்தல் (web based instruction, WBI).
மற்றொன்று, கல்வி வலைத்தளங்கள் வழி கற்றல் (educational web sites, EWS).
இவ்விரண்டும் ஆங்கிலத்தில் மட்டுமே தமிழ் வலைத்தளங்கள் இன்று ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
இவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை கேளிக்கை, பொழுதுபோக்கு, மனமகிழ்ச்சி, வணிகம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை என்பதை மறுக்க முடியாது. ஆயினும், தமிழ்க் கல்வியை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு செயல்படும் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் ஏராளமாகவே இருக்கின்றன.
இவை கற்றல் கற்பித்தலுக்கு உதவக்கூடிய கற்றல் மூலங்களை (learning source) வழங்குகின்றன. அதுமட்டுமல்லாது, கற்றல் கற்பித்தல் தொடர்பான வலைத்தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கி நிருவகிக்கவும் இவை பெரும் வாய்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றன
.செயற்பட முடியும் என்ற நிலைமை மாறி, இன்று தமிழிலும் மிக இலகுவாகச் செயல்படுத்த முடிகின்றது.
இணையத்தில் தமிழ்மொழியில் நிகழ்ந்துள்ள புதிய வளர்ச்சிகளாக சிலவற்றைக் குறிப்பிடலாம்.
முதலாவது, வரிவடிவத்தை ஒலியாக்குதல் (Text to Speech).
இரண்டாவது, பேச்சொலியை வரிவடிவமாக மாற்றுதல் (Speech to Text).
மூன்றாவது, பிறமொழிகளைத் தமிழுக்கும் தமிழைப் பிறமொழிகளுக்கும் தானியங்கி முறையில் மொழிபெயர்த்தல் (Translation).
இவ்வாறான, புதிய வளர்ச்சிகளைத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்திக்கொள்ள வழிவகைகளைக் காண வேண்டும்.
1) மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
2) ஒன்றைப் பற்றிய மேலதிக தகவலை அறிந்துகொள்ளும் வகையில்
தொடுப்புகளைக் (hypelinks) கொண்டிருக்கிறது.
3) வெவ்வேறு ஆற்றலும் விருப்பமும் கொண்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும்
வகையில் கற்பதற்கு வாய்ப்பினை வழங்கிகின்றது.
4) எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics),
நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித் தொடர்பு (interactive)
எனப் பலதரப்பட்ட வகையில் கற்பதற்குரிய சூழல் இருக்கின்றது.
5) மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
6) தனியாகக் கற்பதற்குரிய (individualise learning) வாய்ப்பு கிடைக்கிறது.
7) மாணவரை இலக்காகக் கொண்ட கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெறுகிறது.
8) மனமகிழ்ச்சியுடன் கற்பதோடு வெல்விளி(சவால்) நிறைந்த கற்றல் சூழலை
உருவாக்கிக் கொடுகின்றது.
9) மாணவர்களின் ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும்
வளர்த்துகொள்ள உதவுகிறது.
10) குறிப்பிட்ட காலம், இடம், சூழல் என எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்
கற்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கிறது.
11) கிடைப்பதற்கு அரிய தகவல்களை விரைவாகவும் விரிவாகவும் பெற முடிகின்றது.
12) குறைந்த செலவில் விலைமதிப்பில்லாத் தகவல்களையும் தரவுகளையும்
நொடிப்பொழுதில் மிக எளிதாகப் பெற முடிகிறது.
13) கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்குரிய தீர்வுகளைப் பல முனைகளிலிருந்தும்
மூலங்களிலிருந்தும் உடனடியாகப் பெற முடிகிறது.
14) உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு
கொள்ளவும், இணைய உரையாடல் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், நிகழ்ப்பட
கலந்துரையாடல் நடத்தவும், மின்னஞ்சல் வழி தகவல்களைப் பரிமாறவும்
வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன.
15) தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், புதிய தகவல்களை இற்றைப்படுத்தவும்
(update), தேவையற்ற விவரங்களை நீக்கவும், விரும்பியபடி மாற்றங்களைச்
செய்துகொள்ளவும் முடிகிறது.
மரபு வழியான கற்றல் கற்பித்தலுக்கு இடையில் இணையம் சார்ந்த நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கும் இடங்கொடுக்க வேண்டும்.
இணையம் வழி கற்பித்தலானாலும் சரி அல்லது இணையத்தளங்களைப் பயன்படுத்தி கற்பதானாலும் சரி, இவ்விரண்டினையும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கும் வழிகளை ஆராய வேண்டும்.
Comments
Post a Comment