பண்பாட்டு மாற்றம்
பண்பாட்டு மாற்றம் குறிப்பிட்ட ஒரு மக்கட் குழுவினருக்கு உரிய பண்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதைப் பண்பாட்டு மாற்றம் எனலாம். பண்பாடு என்பது இயக்கத் தன்மை கொண்டது இதில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்பதால், புதியவற்றைக் கற்றுக்கொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது இது குறித்த சில பண்பாடுகளுக்கு மட்டுமன்றி எல்லாப் பண்பாடுகளுக்குமே பொருந்தும் ஒரு விடயம் ஆகும். போக்குவரத்து வசதிகள், தொடர்பு வசதிகள் என்பன மிகவும் குறைவாக இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன இன்றைய காலகட்டம் பல துறைகளிலும் வேகமான மாற்றங்களைக் காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியினால், போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதிகள் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள் அதிகரித்துள்ளன. ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்கமுடியாததாகிறது. பண்பாடு என்பது வெறுமனே பல்வேறு நடவடிக...