தற்கால இந்தியச் சூழலில் தரமான கல்வி
தற்கால இந்தியச் சூழலில் தரமான கல்வி நோக்கம் கல்விபெறும் உரிமைச்சட்டம் 2009 தேசிய பாடத்திட்டக்கட்டமைப்பு 2005 சமீபத்திய அரசுத் திட்டங்கள் நோக்கம் இந்தியக் கல்விமுறை மிகவும் விநோதமான நிலையில் இருக்கிறது. ஒருபுறம், எண்ணற்ற பல மாணவர்கள் உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்று சிறப்பாகச் செயல்படுகிறார்கள். மறுபுறத்தில், பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அடிப்படையான எண்ணறிவையும் எழுத்தறிவையும் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நிர்ணயிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து வாழ்வியலோடு தொடர்பு இல்லாத தகவல்களையும் புள்ளி விவரங்களையும் மனப்பாடம் செய்வதே கல்விமுறை என்றாகி விட்டது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. பாடத்திட்டங்கள் மாணவர்களின் நினைவாற்றலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, அவர்களுடைய பிற ஆளுமைக் கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை என்பதிலும் நியாயம் இருக்கிறது. எனினும், நம் மாணவர்களுக்கு அர்த்தமுள்ள கல்வியை போதிக்க வேண்டும் என்பதற் காகப் பல்வேறு ஆ...